மாஸ் என்ட்ரி கொடுக்கும் இந்த 4 ஸ்மார்ட்போன்கள்!

Update: 2024-03-01 10:01 GMT

Vivo V30 Series

Vivo, Realme, Xiaomi, Nothing நிறுவனத்தின் மொபைல்கள் ரிலீஸாகின்றன.

Realme 12 Plus

Realme 12 Plus ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 6ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது MediaTek Dimensity 7050 சிப் உடனும், 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய AMOLED டிஸ்பிளே உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல், பச்சை மற்றும் கோல்டன் நிறத்தில் ஸ்மார்ட்போன் என தெரிவிக்கப்படுகிறது.

Vivo V30 Series

Vivo நிறுவனத்தின் V30 சீரிஸ் இரண்டு வேரியண்டில் மார்ச் 7ஆம் தேதி வெளியாகிறது. Vivo V30 மற்றும் Vivo V30 Pro என இரண்டு வேரியண்டில் வருகிறது. V30 மாடல் Snapdragon 7 Gen 3 சிப் உடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. இதில் பெரிய பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனுடன் வருகிறது. இதில் 6.78 இன்ச் டிஸ்பிளே 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது.MediaTek Dimensity 8200 சிப் மற்றும் உயர்தர AMOLED டிஸ்ப்ளே உடன் Vivo V30 Pro மொபைல் வருகிறது.

Nothing Phone 2a

வரும் மார்ச் 5ஆம் தேதி Nothing Phone 2a மொபைல் அறிமுகமாக உள்ளது. இதில் இரண்டு கேமரா அமைப்பு இருக்கும். இதில் MediaTek Dimensity 7200 Pro சிப் உடன் வருகிறது. 12ஜிபி RAM உடன் வருகிறது. 6.7 இன்ச் OLED டிஸ்பிளே உடன் வருகிறது. 5000mAh பேட்டரி உடன் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

Xiaomi 14

மார்ச் 7ஆம் தேதி அன்று அமேசானில் Xiaomi 14 மொபைல் அறிமுகமாக உள்ளது. 6.36 இன்ச் ஹை-ரெஸ்சோல்யூஷன் OLED டிஸ்பிளே 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இதில் 50MP மூன்று கேமரா அமைப்புடன் வருகிறது. முன்புற செல்ஃபி கேமரா 32MP உடன் வருகிறது.

Tags:    

Similar News