ஸ்மார்ட் டிவி இப்படி தான் சுத்தம் செய்ய வேண்டும் - தெரிஞ்சிகோங்க !!
ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது. ஆனால் சரியாக செய்யாவிட்டால் டிவி பழுதடைய வாய்ப்பு உள்ளது. கவனமாக இருப்பது முக்கியமானதாகும்.
*சுத்தம் செய்யும் முன் எப்போதும் டிவியை ஆஃப் செய்து விட வேண்டும். சுத்தம் செய்வதற்கு முன்பு அதன் மின் இணைப்பை கட் செய்ய வேண்டும். அதோடு அதன் பிளக்கையும் நீக்குவது பாதுகாப்பானது. இதன் மூலம் எந்த வித மின்சார தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.
*ஸ்மார்ட் டிவி ஸ்கீரினை மிகவும் அழுத்தி கடினமாக தேய்க்க வேண்டாம். மென்மையாக சுத்தம் செய்யவும் வேண்டும்.
*ஸ்மார்ட் டிவி திரையை சுத்தம் செய்ய எப்போதும் மென்மையான, உலர்ந்த மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்துவது நல்லது. நீங்கள் விரும்பினால், நீங்கள் துணியை சிறிதளவு ஈரப்படுத்தலாம், ஆனால் துணி அதிக ஈரமாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
*டிவியின் பக்கங்களிலும் போர்ட்களிலும் படர்ந்து இருக்கும் தூசியை அகற்ற ஏர் ப்ளோயரைப் பயன்படுத்த வேண்டும்.
*டிவியின் திரையில் கரைகள் அதை அகற்ற நீங்கள் சானிடைசர் பயன்படுத்தலாம். உங்கள் வீட்டில் ஸ்கிரீன் கிளீனர் இருந்தால் கூட பயன்படுத்தலாம்.