குஷி !!குஷி!!! மூன்று மடங்கு டேட்டா அதிகம்...

Update: 2024-04-08 09:39 GMT

வோடபோன் ஐடியா 

வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் 49 ரூபாய் ரீசார்ஜ் பிளானில் வழங்கப்பட்ட வந்த அளவை விட மூன்று மடங்கு டேட்டாவை தற்போது கூடுதலாக தருகிறது.இந்த 49 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி 1 நாளாகும். அதாவது, நீங்கள் எப்போது ரீசார்ஜ் செய்தாலும் அன்று இரவு 11.59 மணிக்கு இந்த பிளானில் வேலிடிட்டி நிறைவடைந்துவிடும்.இந்த பிளானில் மொத்தம் 20ஜிபி டேட்டா உங்களுக்கு கிடைக்கும். முன்னர் வெறும் 6ஜபி டேட்டா மட்டுமே இந்த பிளானில் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஐபிஎல் சீசனை முன்னிட்டு முன்பைவிட மூன்று மடங்கு டேட்டாவை அதிகப்படுத்தியுள்ளது.

ரூ.169 ரீசார்ஜ் பிளான்

சமீபத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் 169 ரூபாய் பிரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை கொண்டு வந்தது. இந்த பிளானின் வேலிடிட்டி 30 நாள்கள் ஆகும். இதில் எஸ்எம்ஸ், டேட்டா மற்றும் ஓடிடி பலன்கள் கிடைக்கும். 30 நாள்களுக்கு இந்த பிளானில் மொத்தம் 8ஜிபி டேட்டா கிடைக்கும். கூடவே 90 நாள்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தின் இலவச அணுகல் கிடைக்கும்.

Tags:    

Similar News