சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று வெறும் கண்ணில் பார்க்கலாம் !!!

Update: 2024-05-10 11:19 GMT

சர்வதேச விண்வெளி 

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் சென்னையில் இருந்து வெறும் கண்களால் இன்றிரவு பார்க்கலாம் என நாசா (NASA) அறிவித்துள்ளது. : சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் பூமியில் இருந்து 500 கி.மீ., உயரத்தில் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் சரியாக இன்று இரவு 7.09 மணிக்கு சென்னையை கடக்கும் என நாசா கணித்துள்ளதாக கூறப்புடுகிறது.இரவு 7.09 மணியில் இருந்து சுமார் 7 நிமிடங்களுக்கு சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை சென்னையில் இருந்து வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுவும் சென்னையின் நிலப்பரப்பை கடக்கும்போது மிகவும் பிரகாசமாக வானில் தெனப்படும் எனவும் கூறப்படுகிறது. அதாவது பிரகாசமான நட்சத்திரம் போல் அதனை பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது.மணிக்கு 28 ஆயிரம் கி.மீ வேகத்தில் இந்த ஆய்வு மையம் செல்லும் என்பதால் வெறும் 7 நிமிடங்களில் சென்னை நிலப்பரப்பை கடந்துவிடும் என கூறப்படுகிறது. வெறும் கண்ணிலேயே பார்க்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இந்த நிலையம் பெங்களூரு திசையில் இருந்து வங்கக்கடல், அந்தமான் தீவுகள் திசை நோக்கி நகரும் எனவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News