பிஎஸ்என்எல் வழங்கிய அப்டேட் : BSNL 5G-பாக்கதான போற இனி BSNL பவர !!
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சமீபத்தில் பிஎஸ்என்எல் 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்தி வீடியோகால் மேற்கொண்டு முதல் முறையாகப் பரிசோதித்துப் பார்த்தது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) கடந்த சில மாதங்களாக தனது நெர்ட்வொர்க்கை வலுப்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களை ஈர்க்க மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்துதல் முதல் 4G டவர்களை நிறுவது வரை, அரசு டெலிகாம் நிறுவனம் இப்போது தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட தயாராகி வருகிறது.
பிஎஸ்என்எல் வழங்கிய அப்டேட்:
பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது. BSNL நிறுவனம் அதன் 5G சேவைகளை மிக விரைவில் தொடங்க தயாராகி வருகிறது. எனவே மிக விரைவில் பிஎஸ்என்எல் பயனர்கள் 5ஜி நெட்வொர்க் சேவையை பயன்படுத்த முடியும்.பிஎஸ்என்எல் தனது 5ஜி சேவையை 2025 ஜனவரி மாதத்தில்தொடங்க தயாராகி வருவதாக அறிவித்தார். பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை 5ஜியாக மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனால் 5ஜி சேவையை தொடங்க அதிக முதலீடு தேவைப்படாது. பிஎஸ்என்எல் ஏற்கனவே தனது 4ஜி சேவைகளை தொடங்கியுள்ள பகுதிகளில் 5ஜி சேவை தொடங்கும். 5ஜி சேவை எந்தெந்த நகரங்களில் இந்த சேவையை முதலில் தொடங்கும் என்று நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றாலும், மும்பை மற்றும் டெல்லியில் 4G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தக் கூடும் என BSNL நிறுவனம் தெரிவித்துள்ளது.