5ஜி ரேஸில் குதித்த வோடபோன் ஐடியா...

Update: 2024-02-02 06:56 GMT

வோடபோன் ஐடியா

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா (Vi) அடுத்த 6-7 மாதங்களில் நாடு முழுவதும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

வோடபோன் ஐடியா தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் மூண்டா கூறுகையில், " தங்களது நிறுவனம் 5ஜி உள்கட்டமைப்புக்காக vRAN மற்றும் ORAN போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது

தொடர்ந்து பேசிய அவர், VI  நிறுவனம் மட்டும்தான் இந்த நாட்டில் இழப்பில் இயங்கும் ஒரே தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் என்று கூறினார்.

வோட போன் ஐடியா 2024-ன் இறுதிக்குள் தனது 5G சேவைகளைத் தொடங்கும். இந்தியா முழுவதும் 17 வட்டங்களில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது வோடபோன் ஐடியா.

Jio மற்றும் Airtel-ஐ விட 5G-ல் வோடபோன் ஐடியா பின்தங்கியிருந்தாலும், ப்ரீப்பெய்ட் பிளானில் யூசர்களுக்கு குறைந்த விலையில் ஏராளமான நன்மைகளை வழங்கிவருகிறது.

Vi தற்போது இந்தியாவில் 228 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது.

டெலிகோ நிறுவனம் சமீபத்தில் Amazon Prime Video மற்றும் Disney+ Hotstar சந்தாக்கள் உடன் இரண்டு புதிய ஆண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை Jio மற்றும் Airtel திட்டங்களை விட குறைவான விலை கொண்டது.

Tags:    

Similar News