மழைகாலத்தில் உங்கள் போனை பாதுகாக்கும் வழிமுறைகள் !!

Update: 2024-10-22 11:10 GMT

போனை பாதுகாக்கும் வழிமுறை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மழை பெய்யும்போது செல்போன்களை பாதுகாப்பது தனி வேலையாகி விடுகிறது. ரூ.10,000 முதல் 1 லட்சம் வரை செல்போன் ஆசையாக வாங்கி மழைநீர் மற்றும் தண்ணீர் பட்டதும் பழுதாகி ஆயிரங்களில் செலவுகள் ஏற்படுத்துகிறது.

நீரில் விழுந்தவுடன் அரிசியில் வைப்பது, வெயிலில் காய வைப்பது, சார்ஜ் போடுவது, அடுப்பின் அருகில் வைப்பது போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அரிசியில் வைக்கும் போது அதன் தூசிகள் உள்ளே சென்று ஸ்பேர் ஸ்பார்ட்ஸ்களில் பாதிப்பினை ஏற்படுத்தும்.

வெப்பமிகுந்த இடத்தில் வைப்பதால் தண்ணீர் காய்ந்தது போல் இருக்கும். ஆனால் மதர்போட் மற்றும் ஸ்பேர் ஸ்பார்ட்ஸ்களில் சிறிது சிறிதாக தேங்கி ஸ்க்ரீன் டச், ஸ்பீக்கர் பேட்டரி போன்றவற்றிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.

பேட்டரியில் இருந்து கரண்ட் மற்ற இடங்களுக்கு செல்வதை தடுப்பதால் செல்போன் வெடிப்பதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. சார்ஜ் போடுவதால் தண்ணீர் வழியாக மின்சாரம் பாயந்து கரண்ட் சாக் அடித்து இறக்க கூட நேரிடும். அதிகமாக வெயில் மற்றும் அடுப்பில் வைப்பதால் ஓவர் ஹுட் ஏற்பட்டு செல்போன் செயலிழக்க நேரிடும்.

அதிகமாக சென்று விட்டால் உடனடியாக அருகில் உள்ள செல்போன் சர்வீஸ் கடையில் கொடுத்தால் தனித்தனியா பிரித்து அனைத்து தண்ணீரையும் துடைத்து சரிசெய்து தருவார்கள், தாமதமாக சென்றால் அனைத்து ஸ்பேர் ஸ்பார்ட்ஸ்களில் தண்ணீர் சென்றுவிட்டு பாதிப்பை ஏற்படுத்தும். வாட்டர் ஃப்ருவ் கவர்கள் விற்கப்படுகிறது. அதனை வாங்கி மழைநேரத்தில் வெளியில் செல்லும் போது செல்போன் வைத்து செல்வதால் மழைநீர் செல்வதை தடுக்கலாம். 

Tags:    

Similar News