ஸ்மார்ட்போன் ரொம்ப நேரம் சார்ஜ் செய்தால் என்ன ஆகும் ??

Update: 2024-10-08 10:20 GMT

Technology

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

போனில் சார்ஜ் போகாமல் இருப்பதற்கு ஸ்மார்ட்போன் முழுவதுமாக சார்ஜ் வேண்டும் என்று நம்புகிறோம். அதோடு, சார்ஜரில் போட்ட போனை நீண்ட நேரம் அப்படியே விட்டுவிடுவதும் எல்லாருக்கும் சகஜமாகிவிட்டது. 100% சார்ஜ் ஆன பிறகும் அதை சார்ஜருடன் இணைப்பது உங்கள் போனின் பேட்டரியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஓவர்சார்ஜிங், ஃபோன் பேட்டரியில் உடனடியாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது, ஆனால் அவ்வாறு செய்வது தொலைபேசியின் பேட்டரி ஆயுளை குறைகிறது. சார்ஜ் முழுமையாக ஆன பிறகும், ஃபோனை சார்ஜிங்கில் வைத்திருப்பதால், ஃபோன் ஹீட் ஆகும்.

ஒவ்வொரு முறையும் உங்கள் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்துவிட்டு, அதை டிஸ்சார்ஜ் செய்யும்போது, ​​அது ஒரு பேட்டரி சுழற்சி எனபடுகிறது. அதிகப்படியான பேட்டரி சுழற்சிகள் பேட்டரி திறனைக் பாதிக்கிறது.

ஸ்மார்ட்போன் பேட்டரியை 80% வரை சார்ஜ் செய்வது நல்லது. இது பேட்டரி ஆயுளை நன்றாக வைத்திருக்கிறது. மேலும், தொலைபேசியை முழுவதுமாக டிஸ்சார்ஜ் செய்ய விடாதீர்கள். பேட்டரி 20% ஆக இருக்கும்போது, ​​அதை சார்ஜிங் பண்ண வேண்டும்.

வெப்பமான இடத்தில் வைத்து ஃபோனை சார்ஜ் செய்ய வேண்டாம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து போனை சார்ஜ் செய்வதையும் முழுவதும் தவிர்க்கவும்.  

Tags:    

Similar News