விரைவில் WhatsApp புதிய அப்டேட்..!!!

Update: 2024-03-20 09:58 GMT

WhatsApp

ஒரு நிமிட வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்ஸில் வைக்கலாம் மற்றும் UPI வழியாக வேகமாக பியர்-டு-பியர் (P2P) பணம் செலுத்தும் வசதி. தற்போதைய நிலவரப்படி, பயனர்கள் புகைப்படங்களைத் தவிர வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் 30 வினாடி வீடியோக்களை மட்டுமே பதிவேற்ற முடியும். வரும் நாட்களில் வாட்ஸ்அப் நிறுவனம் 30 வினாடிகளை 1 நிமிடமாக அதிகரிக்கப் போகிறது. இந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் 1 நிமிட கால வீடியோக்களை பதிவேற்ற முடியும். பயனர்கள் அரட்டை பட்டியலிலிருந்தே UPI குறியீட்டை ஸ்கேன் செய்யும் வசதியைப் பெறுவார்கள். இதற்காக, நிறுவனம் அரட்டை பட்டியலுக்கு மேலே ஒரு ஸ்கேனரை வழங்கும். தற்போது இந்த அம்சம் சில பீட்டா சோதனையாளர்களுக்குக் கிடைத்துள்ளது.உங்களுக்கு தெரியாத மற்றும் ஸ்பேம் அழைப்புகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் வகையில் Silence unknown callers அம்சம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஐந்த அம்சத்தின் முக்கிய பணி ஸ்பேம் அழைப்புகளை தானாக பில்டர் செய்வது.Settingsகளுக்குச் சென்று Privacy என்பதை கிளிக் செய்யவும். Call tab Privacyல் கொடுக்கப்படும், அதை கிளிக் செய்யவும். இங்கு Silence unknown callers என்ற ஆப்ஷன் கிடைக்கும், அதை ஆன் செய்யவும்.

Tags:    

Similar News