வண்டிகளுக்கு வயர்லெஸ் சார்ஜிங்!!!! இது வேற லெவல்தானே!
அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரத்தின் ஒரு சாலைதான் இந்த வயர்லெஸ் சார்ஜிங் பாயின்ட். வண்டி போய்க் கொண்டிருக்கும்போதே சார்ஜ் ஏறும் என்பதுதான் வேற லெவல்.
இந்த சார்ஜிங் டெக்னாலஜியைக் கண்டுபிடித்திருக்கும் நிறுவனத்தின் பெயர் Electreon.இந்தச் சாலைக் கட்டுமானத்துக்குப் பெயர் Asphalt.பார்ப்பதற்குச் சாதாரண சாலை போலத் தெரியும் இதற்குக் கீழே எலெக்ட்ரோ மேக்னட்டிக் காயில்களைப் பொருத்தி வைத்திருக்கிறார்கள்.
இந்தக் காயில்களுக்குப் பெயர் Magnetic Inductive Coils. இந்தக் காயில்கள்தான் எலெக்ட்ரோ மேக்னட்டிக் ஃபீல்டுகளைச் சாலைக்கு மேலே உருவாக்கிக் கொண்டிருக்கிறது.அந்த நேரத்தில் வாகனங்கள் பயணிக்கும்போது, சாலையில் உருவாகும் எலெக்ட்ரோ மேக்னட்டிக் ஃபீல்டுகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து, சாலையில் உள்ள ரிசீவர் மூலம் நமது வாகனத்தின் பேட்டரிக்கு டிரான்ஸ்ஃபர் செய்கிறது.இண்டக்டிவ் காயில்கள் மூலம் இது நடைபெறுவதால், இந்த சிஸ்டத்துக்குப் பெயர் இண்டக்டிவ் சார்ஜிங் (Inductive Charging). வண்டி ஓடினா எவ்வளவு சார்ஜ் இறங்குமோ… அதே அளவுக்கு நம் வாகனத்தின் பேட்டரியிலும் சார்ஜ் ஏறும் என்பதுதான் இதன் கான்செப்ட். சுமார் 402 மீட்டர் வரைதான் இந்த ஸ்ட்ரெட்ச்சில் முடியும்.