- Home
- /
- ஷாட்ஸ்

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை தொடங்கியது. கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமின் கோரினர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இருவரும் முன்ஜாமின் கோரிய மனு விசாரணை நடைபெற்று வருகிறது. புஸ்ஸி ஆனந்த் முன்னாள் எம்எல்ஏ என்பதால் வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட வேண்டும் என அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மகேஷ் அளித்த பேட்டியில், ரயில் நிலையங்களில் மூன்று கட்டங்களாக துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த துாய்மை பணிகளில், 28,000 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்; 8.6 டன் பிளாஸ்டிக் மற்றும் 165 டன் இரும்பு கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மறு சுழற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளன. வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில், மொத்தம் 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இதில், தென் மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் 50 சதவீதம் சிறப்பு ரயில்களும், பிற மாநிலங்களுக்கு 50 சதவீதம் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. எப்போது இயக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இன்று ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.110-ம், சவரனுக்கு ரூ.880-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 840-க்கும், ஒரு சவரன் ரூ.86 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.161-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகி வருகிறது.

மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ரூ.1 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்தது. தமிழகத்திற்கு ரூ.4,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு முன்கூட்டியே தவணை தொகையை விடுவித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, உத்தரபிரதேசத்திற்கு ரூ.18,227 கோடியும், பீஹாருக்கு ரூ.10,219 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.7,976 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ.7,644 கோடியும், மஹாராஷ்டிராவுக்கு ரூ.6,418 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.6,123 கோடியும் விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கரூரில் விஜய் பரப்புரையின்போது 41 பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. சிபிஐ விசாரணை கோரி பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உள்ளிட்டோர் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. கரூர் போலீசார் நடத்தி வரும் விசாரணை தொடக்க நிலையில் உள்ளபோது, சிபிஐ விசாரணை கோருவதா? என நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பரப்புரைக்கு இனி அனுமதிக்கக் கூடாது என கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக 7 வழக்குகள் விசாரணையில் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் "அனுமதி அளிக்கப்பட்ட இடம் மாநில சாலையா? தேசிய நெடுஞ்சாலையா?, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் நலனே முக்கியம், விஜய் பரப்புரை கூட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டதா?" எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். வழிகாட்டு நெறி முறை வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்காது என அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் புத்தாக்கத் தொழில்களின் எண்ணிக்கை 12,100ஆக அதிகரிப்பு என திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளதை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுரை. புத்தாக்கத் தொழில்களில் 50% மகளிரால் நடத்தப்படுபவை என்பது தமிழ்நாட்டுக்கு பெருமை. 4 ஆண்டுக்கு முன் 2032ஆக இருந்த புத்தாக்கத் தொழில் எண்ணிக்கை திமுக ஆட்சியில் 6 மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.87,120க்கு விற்பனையாகிறத். இதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.30 அதிகரித்து ரூ.10,890க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 161 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏஐசிசி) தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காய்ச்சல் காரணமாக பெங்களூருவில் உள்ள எம்எஸ் ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். தொடர் காய்ச்சல் காரணமாக கார்கே செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற எம்.எஸ். ராமையா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காய்ச்சலுக்கான காரணத்தைக் கண்டறிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் மருத்துவமனை நிர்வாகத்திடமிருந்து விரைவில் கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. கார்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் கவலையைத் தூண்டியுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 16 ரூபாய் அதிகரித்து ரூ. 1,754-க்கு விற்கப்படு்கிறது 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 868 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.

சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய பகுதியில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட பெரும் விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நடைபெறும் கட்டுமானப் பணியின் ஒரு பகுதியாக சுமார் 30 அடி உயரத்தில் பிரமாண்ட ராட்சத வளைவு அமைக்கும் பணியில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென சாரம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் பணியாற்றியதால் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். பலர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி ஆயுத பூஜை அன்றும், அக்டோபர் 2ம் தேதி விஜயதசமி அன்றும் அரசு விடுமுறையாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 3ம் தேதியையும் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து நாளை முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்ட த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். த.வெ.க. தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது சைபர் கிரைம் போலீஸ் வழக்குபதிவு செய்துள்ளனர். மக்களின் அமைதியை குலைக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்து பதிவிட்டதாக வழக்குபதிவு செய்துள்ளனர்.

த.வெ.க.வினர் முதலில் கேட்ட இடத்தில் அமராவதி ஆற்றுப் பாலமும், பெட்ரோல் பங்க்கும் உள்ளது என அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். முதலில் அனுமதி கோரிய லைட் அவுஸ் ரவுண்டானா பகுதியில் பெட்ரோல் பங்க், ஆறு அருகில் இருந்தது. இரண்டாவதாக உழவர் சந்தை பகுதி மிகக் குறுகிய இடம் என்பதால் 5,000 பேர் மட்டுமே திரள முடியும். 10,000 பேர் பங்கேற்பார்கள் என அனுமதி கேட்டிருந்தனர் த.வெ.க.வினர். 25ம் தேதியே வேலுச்சாமிபுரம் ஒதுக்கீடு செய்வதாகக் கூறியபோது அதனை த.வெ.கவினர் ஏற்றுக் கொண்டனர். 2 நாட்களுக்கு முன் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூட்டம் நடத்திய அதே வேலுச்சாமிபுரம்தான் விஜய் கூட்டத்துக்கு ஒதுக்கப்பட்டது. 10,000 பேர் கேட்டதால் 20,000 பேர் வருவார்கள் எனக் கருதி பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. வேலுச்சாமிபுரத்தில் வழக்கத்தைவிட கூடுதலான பாதுகாப்பு தவெகவினருக்கு வழங்கப்பட்டது.








