- Home
- /
- ஷாட்ஸ்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 27ம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதனை மாற்றி சேலம் மற்றும் நாமக்கல்லில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 27ஆம் தேதி சேலம் மற்றும் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சேலத்திற்கு பதிலாக கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் காலை 11 மணியளவில் நாமக்கல் மாவட்டத்தில் விஜய் உரையாற்றுவார் எனவும் அதன்பிறகு கரூர் மாவட்டத்தில் மாலை 3 மணி அளவில் உரையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, அக்டோபர் 11 ஆம் தேதி மதுரையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குவதாக தெரிவித்தார். அமித்ஷா – இபிஎஸ் சந்திப்பு குறித்து எதுவும் பேசவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். விஜய்க்கு கூட்டம் வருவதை வைத்து திமுகவுக்கு நேரடி போட்டி என் சொல்ல முடியாது என தெரிவித்தார். “விஜய் உரிய தரவுகள் எதுவும் இல்லாமல் பேசி வருவதாகவும் அவர் சாடினார்.

பள்ளிக் கல்வித்துறை சார்பாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி பொதுத் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெறும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மேலும், கடந்த பொதுத்தேர்வில் தமிழில் முழு மதிப்பெண் பெற்ற 142 மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது என கூறினார்.

மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவி கீதாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களுடைய மனைவி திருமிகு. கீதா ராதா அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் சகோதரி திருமிகு.ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி, கொடைக்கானல் போன்று வால்பாறையிலும் நவம்பர் 1 முதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது தொடர்பாக வரும் டிசம்பரில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., குழு நீதிமன்றத்தில் பதில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 42 கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு அளித்துள்ளது. 2019 முதல் தொடர்ச்சியாக 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த கட்சிகளின் பதிவுகள் ரத்து செய்தது. தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்யாத கட்சிகளின் பதிவுகளையும் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்த 10 விமானங்கள், தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. கொச்சி, தூத்துக்குடி, மும்பை, டெல்லி உள்ளிட்ட 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்கள் ஒரு மணி நேர தாமதத்துக்கு பிறகு புறப்பட்டன.

சேலம் சங்ககிரியில் ஆம்னி பேருந்தில் 3 கிலோ நகைகளை திருடிய வழக்கில் 48 மணி நேரத்தில் போலீசார் இருவரை கைது செய்தனர். மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில் குமாரை சந்தித்து தங்க நகை உற்பத்தியாளர் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர். இருவரைம் கைது செய்த போலீசார் ரூ.4 கோடி மதிப்புள்ள 3 கிலோ 150 கிராம் நகைகளை மீட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு நகைக்கடையில் பணிபுரிந்த பாலசுப்பிரமணியன் கொள்ளையை அரங்கேற்றியுள்ளார்.













