- Home
- /
- ஷாட்ஸ்

சாலைகள், தெருக்களில் சாதியப் பெயர்களை மாற்றுவது குறித்து அரசு இறுதி முடிவு எடுக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. “முன்னறிவிப்பு இன்றி செய்தால் மக்களிடையே குழப்பம் ஏற்படாதா?” என நீதிபதிகள் அனிதா சுமந்த், குமாரப்பன் அமர்வு கேள்வி எழுப்ப, “டெல்லி, உ.பி. போன்ற மாநிலங்களில் மாற்றம் செய்யும் போது வராத குழப்பம், இங்கே எப்படி வந்துவிடும்” என அரசுத் தரப்பு பதிலளித்துள்ளது.

தமிழ்நாட்டில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அக்.24ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு எனவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வலுவடையக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கட்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை. இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அந்நாட்டு பிரதமரிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினையில் தூதரக நடவடிக்கைகள் மூலம் ஒன்றிய அரசு தலையீட்டை தொடர்ந்து கோரி வருகிறோம். தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு 72 முறை கடிதம் எழுதியுள்ளேன். மாநில அரசின் முறையான ஒப்புதலை பெறாமல் ஒன்றிய அரசால் கச்சத்தீவு இலங்கைக்கு மாற்றப்பட்டது என தெரிவித்தார்.

தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனையோடு மத்திய அரசு நிதி வழங்க மறுக்கிறது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிதி பிரச்சனை குறித்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். நிதி பிரச்சனையில் அக்கறை இருந்தால் அதிமுக எம்.பி.க்கள் குரல் கொடுங்கள். நிதி பிரச்சனை குறித்து ஜி.எஸ்.டி.கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. திமுக அரசு துரோகத்துக்கும் கொடுமைக்கும் ஆளாகவேண்டும் என ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனையோடு மத்திய அரசு நிதி வழங்க மறுக்கிறது என தெரிவித்தார்.

சித்த மருத்துவ பல்கலை. மசோதாவிற்கு ஆளுநரின் பரிந்துரைகள் சட்டத்துக்கு எதிரானவை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டது. சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவுக்கு ஆளுநரின் கருத்தை கேட்பது அவசியம் என்பதால் அவரது கருத்து கேட்கப்பட்டது. ஆனால் ஆளுநர் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளார். ஆளுநரின் பரிந்துரைகள் சட்டத்துக்கு எதிரானவை என சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்தார்.

சிறுநீரக விற்பனை முறைகேடு தொடர்பாக அரசு முறையாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சிறுநீரக விற்பனை முறைகேடு குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த விளக்கத்தில், "சிறுநீரக விற்பனை முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி வினித் தலைமையிலான குழு நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் ஆய்வு மேற்கொண்டது. சிறுநீரக விற்பனை முறைகேடு தொடர்பாக 2 இடைத்தரகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி, பெரம்பலூர் தனியார் மருத்துவனைகளின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது,"இவ்வாறு தெரிவித்தார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழக பாஜகவின் சட்டமன்ற குழு தலைவரும், எங்கள் மாநிலத் தலைவருமான, அன்பு அண்ணன் நயினார் நாகேந்திரனுக்கு, இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனது இன்முகத்தாலும், உயரிய பண்புகளாலும் அனைவரின் அன்பையும் பெற்ற அண்ணன் நயினார் நாகேந்திரன், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவது இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்ல சுப நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வைத்திருக்கும் குடும்ப தலைவர்களுக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை எப்போது இறங்கும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,900-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.95200-க்கும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரம் ரூபாயும் குறைந்து, ஒரு கிராம் ரூ.206-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

இன்று (அக் 15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,860க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.207க்கு விற்பனை ஆகிறது. இம்மாதம், 1ம் தேதி தங்கம் சவரன், 87,600 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த இரு வாரங்களில் மட்டும் சவரனுக்கு எப்போதும் இல்லாத வகையில், 7,280 ரூபாய் அதிகரித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் கைதான த.வெ.க. நிர்வாகி பவுன்ராஜ் ஜாமின் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் சிபிஐயை எதிர்மனுதாரராக இணைத்து மனுத்தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நிகழ்ச்சி ஏற்பாட்டில் தான் இல்லை என்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என அவர் தரப்பு வாதிட, இச்சம்பவத்தில் பொறுப்பு இல்லை என தட்டிக் கழிக்க முடியாது அனைவருக்கும் பொறுப்புள்ளது என நீதிபதி கூறியுள்ளார்.

கொரோனா காலத்தில் அதிகாரிகள் பேட்டி அளித்தனர் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அதிகாரிகள் பேட்டி அளிக்கவில்லையா? கொரோனா காலத்திலும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதும் அதிகாரிகள் பேட்டியளித்தனர். கரூர் நெரிசல் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

பிரச்சார வாகனத்தை நிறுத்த கரூர் மாவட்ட எஸ்.பி. பலமுறை கூறியும் அதை நிறுத்தாமல் சென்றனர் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காவல்துறையின் அறிவுறுத்தலை மீறி 35 மீட்டர் தூரம் வரை விஜய் வாகனம் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. மீட்புப்பணி நடந்துகொண்டிருக்கும்போதே 2 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தவெகவினர் தாக்கினார்கள் என்று தெரிவித்துள்ளார்.







