மஸ்கட்டில் நடந்த 28வது சர்வதேச புத்தக கண்காட்சி
மஸ்கட்டில் நடந்த 28வது சர்வதேச புத்தக கண்காட்சி
மஸ்கட்டில் உள்ள ஓமன் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி மையத்தில் 28வது சர்வதேச புத்தக கண்காட்சி கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை நடந்தது. இந்த கண்காட்சியில் ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இந்தியா உள்ளிட்ட 34 நாடுகளைச் சேர்ந்த 847 புத்தக நிறுவனங்கள் பங்கேற்றன. இங்கு அரபி மொழி நூல்கள், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த கண்காட்சியானது 'செயற்கை நுண்ணறிவு' என்ற கருப்பொருளில் நடந்தது.
மேலும் அல் தாகிரா கவர்னரகம் இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக பங்கேற்றது. இதன் காரணமாக அந்த பகுதியின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளிட்டவைகள் சிறப்பு அரங்குகள் ஏற்படுத்தப்பட்டது. பாலஸ்தீனம் குறித்து அதிகமான புத்தகங்களும் இதில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தக கண்காட்சியை பார்வையிட பொதுமக்கள் மட்டுமல்லாது, பல்கலைக்கழக, கல்லூரி மற்றும் பள்ளிக்கூட மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலரும் அதிக ஆர்வம் காட்டினர். பொதுமக்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும், மாணவ, மாணவியருக்கு என பிரத்யேகமான நிகழ்ச்சிகளும் நடந்தது. வளைகுடா பகுதியில் ஷார்ஜா, அபுதாபி, ரியாத் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக மஸ்கட் சர்வதேச புத்தக கண்காட்சி பொதுமக்களை அதிகம் கவர்ந்து வருவது முக்கியமானது.