பஹ்ரைனில் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் அமைப்பின் உதவி
பஹ்ரைனில் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் அமைப்பின் உதவி;
Update: 2024-08-13 13:41 GMT
பஹ்ரைனில் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் அமைப்பின் உதவி
லைட்ஸ் ஆஃப் கைன்ட்னஸ் சமூக உதவி இயக்கத்தின் சார்பில் 'வெப்பத்தை வெல்லுங்கள்' திட்டம் சார்பாக, தண்ணீர் பாட்டில்கள், பழச்சாறுகள், தொப்பிகள், இனிப்புகள் மற்றும் பஹ்ரைன் பேருந்து கார்டுகள் ஆகியவை மனாமா மற்றும் ஸல்மானியா பகுதியில் உள்ள தொழிலாளர் முகாமில் வசித்து வரும் குறைந்த வருமானம் பெறும் நூறு பேர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
மேலும் குதைபியா பகுதியில் வேலையிழந்த ஒருவருக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் கிடைக்காத நிலையில், அவருக்கு உணவுப் பொருட்களும் விநியோகிக்கப்பட்டது. லைட்ஸ் ஆஃப் கைன்ட்னஸ் சமூக உதவி இயக்க பிரதிநிதிகள் ஃபசல் ரஹ்மான், ரமணன், சையத் ஹனீஃப் மற்றும் குதைபியா கூட்டம் அமைப்பின் ரியாஸ் ஆகியோர் விநியோகத்தில் பங்கேற்றனர்.