பஹ்ரைன் மகளிர் தினம் கொண்டாட்டம்

பஹ்ரைன் மகளிர் தினம் கொண்டாட்டம்

Update: 2024-12-10 15:12 GMT

பஹ்ரைன் மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் அமைப்பும், வுமன் அக்ராஸ் அமைப்பும் சேர்ந்து, ஹித் பகுதியிலுள்ள குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையத்தின் தலைவரான மாமா பாஸ்மாவைச் சந்தித்தார். மாற்று திறனுள்ள குழந்தைகளுக்காக, அசையாத அன்பு மற்றும் அர்ப்பணிப்புடன் சேவை செய்து வரும், மாமா பாஸ்மா எல்லாவற்றிலும் எளிமையும், கருணையும் கொண்டு செயல் பட்டுவரும் விதம் உண்மையிலேயே போற்றத்தக்கது. 

மாமா பாஸ்மா பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியாவின் தொலைக்காட்சி விருதான 'கஃபு' அங்கீகாரம் வென்றவர். பஹ்ரைனில் உள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்தும் பல அங்கீகாரங்களைப் பெற்றுள்ளதும் குறிப்பிடதக்கது.. லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் குழுவினரான ஃபசலுர் ரஹ்மான், அத்னான்,ஹாஜர், ஆயிஷா நிஹாரா மற்றும் சையத் ஹனீஃப் ஆகியோர் கொண்ட லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் குழுவினரும், வுமன் அக்ராஸ் அமைப்பின், சுமித்ரா, ஜாஸ்மா விகாஸ், த்ரிஷ்யா ஜோதிஷ், ரீஷ்மா வினோத், பிரவீன் நாயர் ஆகியோரும் கொண்டாட்டம் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News