பஹ்ரைன் நாட்டில் "செயல் திறனுக்காக உந்துதலாக இருங்கள் மராத்தான் (3)"

பஹ்ரைன் நாட்டில், "செயல் திறனுக்காக - உந்துதலாக இருங்கள் மராத்தான் (3)"

Update: 2024-01-23 11:15 GMT

பஹ்ரைன் நாட்டில், ஸீஃப் மாவட்டத்தில், வாட்டர் கார்டன் சிட்டி பகுதியில் பஹ்ரைன் கேற்றலிஸ்ட் டிஸெபிலிட்டி சங்கம் சார்பாக "செயல் திறனுக்காக - உந்துதலாக இருங்கள் மராத்தான்(3)" என்கிற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த உன்னத நோக்கத்தை ஆதரிக்கும் வகையில், லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் (சமூக உதவி இயக்கம்) அங்கு நடைபெற்ற 2 கி.மீ ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றது. தலைநகர ஆளுநகரத்தின் துணை ஆளுநர் ஹசன் அப்துல்லா, தகவல் மற்றும் தொடர் கண்காணிப்பு இயக்குநர் யூசுப் லோரி, சல்மானியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் அல் சலூம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். மாசூமா மற்றும் பஹ்ரைன் கேற்றலிஸ்ட் டிஸெபிலிட்டி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட 1000 க்கும் மேற்ப்பட்ட பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் , மருதாணி வடிவமைப்பு, முக ஓவியம், குழந்தைகளுக்கான வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல், அரபு மொழி கற்றல் மற்றும் அரபு எழுத்து வடிமைப்புகள் ஆகியவற்றின் இலவச சாவடியை லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் அமைத்திருந்தது. லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸின் பிரதிநிதிகள், சையத் ஹனீஃப், ஆதம் இப்ராஹீம், வி.சி. கோபாலன், காத்து சச்சிந்தேவ், முகமது யூசுப், ஆயிஷா நிஹாரா மற்றும் நலம் விரும்பிகள் மது சர்தா, சந்தீப் சர்தா, அப்துல் மன்ஷீர், முபீனா, நௌஃபல், தேஜேந்தர் சிங், ஷிஹாப் மற்றும் மொய்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News