பாரதி, பாரதிதாசன் கவிதை அமைப்பு பாவேந்தர் விழா 20 ஆம் ஆண்டு விழா
பாரதி, பாரதிதாசன் கவிதை அமைப்பு பாவேந்தர் விழா 20 ஆம் ஆண்டு விழா
பாரதி பாரதிதாசன் கவிதை அமைப்பு பாவேந்தர் விழா மற்றும் இருபதாம் ஆண்டு விழா சென்னை மடிப்பாக்கம் மூவரசம் பேட்டை குளம் பின்புறம் உள்ள வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் இலக்கிய சிற்பி ராச வேதாந்தம் அரங்கம், கவிமாமணி வாசல் வசந்தபிரியன் மேடை, எழுத்துச்சிற்பி தே.ந.கந்தசாமி அவர்களின் தந்தை ஆரணி எஸ்.நடேசனார் நினைவாக விருதுகள் வழங்கப்பட்டது. இசைக்கவி ரவிச்சந்திரன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். தமிழிசை குயில் கௌசல்யா ரவிச்சந்திரன், நிறுவனத் தலைவர் தமிழ் முகில் திருவைபாபு ஆகியோர் வரவேற்றனா். வானதி பதிப்பக நிறுவனர் முனைவர் வானதி இராமநாதன் தலைமை தாங்கினார். ஏரிக்கரை இலக்கிய வட்டம் அமைப்பாளர் கவிஞர் ஹரி கோபாலகிருஷ்ணன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். விழாவில் கவிமாமணி சுப.சந்திரசேகரன், சண்முக சிந்தனையாளர் வைரக்கண்ணு (அமெரிக்கா), கவிஞர் ஹாரிங்ட்டன் ஹரிஹரன், வெற்றி முனை ஆசிரியர் முனைவர் பாட்டழகன், வானதி பதிப்பகம் முனைவர் பெ.மயில் வேலவன், தமிழ் தொண்டர் சுந்தர விநாயகம், சிலம்பொலி ராமராஜன், செந்தமிழ் இலக்கிய மன்ற தலைவர் பாவலர் முக்கனி, பாரதியின் கொள்ளுப்பேத்தி தமிழ்க்குயில் உமாபாரதியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கவிஞர் நாஞ்சில் இரா.லாரன்ஸ்குமார் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். சென்னை அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் தேசியத் தலைவர், திருவள்ளுவர் விருத்தாளர் முனைவர் கோ.பெரியண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினரை கவிச்சுடர் சிந்தைவாசன் அறிமுகம் செய்து வைத்தார். விழாவில் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், கவிஞர் தொலைபேசி மீரான், பாரதி கலைக்கழகம் தலைவர் முனைவர் குமரி செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் சிந்தனைச் செல்வர் கவிஞர் நாஞ்சில் இரா லாரன்ஸ் குமார் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். கவிச்சுடர் சிந்தை வாசன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். பயண இலக்கியச் சிற்பி முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் , நம் உரத்த சிந்தனை மாத இதழ் நிர்வாக ஆசிரியர் கவிஞர் தொலைபேசி மீரான், பாரதி கலைக்கழகம் தலைவர் முனைவர் குமரிச் செழியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து கருத்தரங்கமும், செந்தமிழ் வளர்த்த செம்மல்கள் படத்திறப்பு விழாவும், துறை சார்ந்த தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தமிழறிஞர் துரை சுந்தரராஜு - செந்தமிழ் நாவலர் விருது, துரை சுப்பிரமணியம் - ஆழ்வார்க்கடியான் விருது, த.கு.திவாகரன் - செந்தமிழ் நாவலர் விருது, வேண்மால் - சொல்லின் செல்வி விருது, கார்முகிலோன் - பாகவதர் தாசன் விருது, ஆா்.நடராஜன் - பொது உடமை செம்மல் விருது, எஸ்.ஆர்.ஜி.சுந்தரம் - நவரச நாடகச் சிற்பி விருது, வெ.க.சந்திரமோகன் - தமிழ் தேசிய காவலர் விருது, நாவலர் நாராயணன் - வைணவ செம்மல் விருது, முனைவர் சக்கரவர்த்தி - திருக்குறள் ஞாயிறு விருது, டாக்டர் கே.மஞ்சுளா தமிழிசைக் கடல் விருது, என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி - இலக்கிய வள்ளல் விருது, மா.வே.மாணிக்கவாசகம் - திரை இசைத்தென்றல் விருது, மா.ப.வானரசன் - காந்தி தான் விருது, பெங்களூரு கவிநிலவு தேன்மொழி - நெறியாளுகைத் தென்றல் விருது என கவிச்சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நன்மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அனுசுயா, ஜாய்ஸ் ஜெனிஃபர், நிவேதா, தாகூர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் லக்சனா, மழலை மேரி, ஸ்ரீவசந்த் ஆகியோருக்கு ஞானபாரதி விருது வழங்கப்பட்டது. கலைப்பிரிவில் மா.தேஜஸ்வினி, நவரச நாட்டியத் திலகம் பட்டத்தையும், வேதாந்த் க்கு ஞானபாரதி பட்டத்தையும் திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் முத்துராமலிங்கம், திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து கவிஞா் வா.கோ.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் பாவேந்தர் பாரதிதாசன் என்ற தலைப்பில் கவிஞர்கள் பங்கேற்றனர். இறுதியாக பாரதி பாரதிதாசன் கவிதை அமைப்பு துணைத்தலைவர் சுப.சந்திரசேகரன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பாரதி பாரதிதாசன் கவிதை அமைப்பின் தலைவர் கவிஞர் திருவைபாபு, செயல் தலைவர் முனைவர் குமரிச் செழியன், பொருளாளர் செல்வராஜ், துணைத்தலைவர்கள் நெல்லை தீபன், சுப.சந்திரசேகரன், கவிஞர் ராமலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.