சென்னையில் அயலக தமிழர்கள் தினம் 2024 துவக்கம்
சென்னையில் அயலக தமிழர்கள் தினம் 2024 துவக்கம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
சென்னையில் அயலக தமிழர்கள் தினம் 2024 துவக்கம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
சென்னை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் தினம் 2024 விழா கொண்டாடப்பட்டது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அயலக தமிழர்கள் தங்களது நூல்களை வெளியிட்டனர்.
இவ்விழாவில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும் அயலக வெளிநாடு வாழ் தமிழர்களின் நலக்குழு தலைவருமான செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து அயலக தமிழர்கள் எழுதிய நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில் தமிழின் தொன்மை, சிந்து சமவெளி முதல் செயற்கை நுண்ணறிவு வரை தொலைநோக்கு சிந்தணையும் செயலும் குறித்து கவியரங்கம் மற்றும் கருத்துரைகள் நடைபெற்றது.தொடர்ந்து அயலகத் தமிழர்களுக்கான தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள், ஒளிரும் எதிர்காலம் வாய்ப்புகளும். சவால்களும், வணிகத்தில் தமிழர்கள் வாய்ப்பும் வளர்ச்சியும் என்ற தலைப்புகளில்கருத்தரங்கம் மற்றும் விவாதங்கள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கவிப்பேரரசு வைரமுத்துமற்றும் பயலாகத் தமிழர்கள் தமிழ்ச்சங்க ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு விவாதித்தனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதை அடுத்து இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
தொடர்ந்து சிங்கப்பூர் அமைச்சர் காசி விசுவநாதன் சண்முகம் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தமிழ் மொழி வளர்ச்சியில் அயலகத் தமிழர்களின் பங்களிப்பு, அயலகத்தில் தமிழ்க்கல்வி - கற்றல் கற்பித்தல் உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்புரையாற்ற உள்ளனர்.