துபாயில் ’தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ நூல் வெளியீட்டு விழா

துபாயில் ’தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ நூல் வெளியீட்டு விழா

Update: 2024-02-07 10:04 GMT

துபாயில் ’தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ நூல் வெளியீட்டு விழா

துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் ’தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ நூல் வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்வின் தொடக்கமாக இலங்கை மௌலவி எம்.எஸ். நிஸ்தார் நுழாரி இறைவசனங்களை ஓதினார். விழாவுக்கு கீழக்கரை பி.ஆர்.எல். முஹம்மது சலீம் தலைமை வகித்து, பேசுகையில், கவிஞர் ச.சி.நெ.அப்துல் ஹக்கீம் மற்றும் ச.சி.நெ. அப்துல் றஸாக் ஆகியோர் எழுதிய ‘தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ துபாய் நகரில் வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

நூலை கீழக்கரை பி.ஆர்.எல். முஹம்மது சலீம் வெளியிட முதல் பிரதியை முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஹ்ரூப் பெற்றுக் கொண்டார். அதனையடுத்து பேசிய ஏ. முஹம்மது மஹ்ரூப் தனது உரையில் கவிஞர் ச.சி.நெ.அப்துல் ஹக்கீம் மற்றும் ச.சி.நெ. அப்துல் றஸாக் ஆகியோர் கீழக்கரை குறித்த வரலாற்றை இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள உதவும் வகையில் ’தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ என்ற நூலை எழுதியுள்ளனர். கீழக்கரை பழம்பெரும் நகர் என்ற பெருமையை பெறும் வகையில் இந்த நூலில் அரிய பல தகவல்கள் இடம் பெற்றுள்ளது சிறப்புக்குரியது என்றார். இந்த விழாவில் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், செய்யது முஹம்மது, சாகுல், ஹபிப் முஹம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News