நவராத்திரியை உற்சாகமாக கொண்டாடிய அமீரகத் தமிழர்கள்
பெண்களை பெருமை படுத்தி அவர்களை பெண் தெய்வங்களாக கருதும், பொம்மை கொலு நவராத்திரி, தசரா, என பல்வேறு பெயர்களில் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா கடந்த 10 நாட்களாக, பெரும் ஆர்வத்துடனும், தணியாத கலை நயத்துடனும், நளினமான எளிமையான பொம்மை அலங்காரங்கள் முதல் பிரமாணடமான அசத்தும் அமைப்புகள் வரை அமீரகம் முழுதும் கொண்டாடப்பட்டது. கும்மி, கோலாட்டம், என தென் இந்தியர்களும் கர்பா, டாண்டியா என வட இந்தியர்களும்,
பிறரை வீட்டிற்கு அழைத்து உபசரித்து, மங்கல பொருட்கள் அன்பளிப்புகள் தந்து பத்து நாட்களும் இல்லங்களை அலங்கரிப்பது, வித விதமாய் உணவுகளை பகிர்வது, அழகாய் உடுத்தி மகிழ்வது என இந்திய மக்கள் வாழும் பகுதிகளில், திரும்பிய இடமெல்லாம் கோலாகலமாய் கொண்டாடினர். பலரும் தங்கள் வீடுகளில் தெய்வ பாடல்களை பாடவும் இசைக்கவும் செய்தனர். இசை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுடன் பல இல்லங்களுக்கு சென்று ஆன்மீக பாடல்களை பாடினர், பெண்கள் குழந்தைகளுக்கான விழா என்றாலும் பல குடும்பங்களில் ஆண்களும் தங்களை ஈடுபத்தி கொண்டு தங்கள் இல்லத்தின் வித்தியாசமான கொலு அலங்காரத்திற்கு உதவுவதும், வருபவர்களுக்கு உபசரிப்பதும், அதனை விருந்தினர்களுக்கு விவரிப்பதும் பார்க்க கொள்ளை அழகு.அமீரகத்தின் யூ ட்யூப் சேனலான ‘அமீரக வலை ஒளி’ பல வீடுகளுக்கும் சென்று அன்பளிப்புகளை தந்து, சிறப்பு கொலு அலங்கார கொண்டாடத்திற்கு பரிசு பொருட்களும் அறிவித்தனர்.