அபுதாபியில் எக்ஸலண்ட் குரூப் ஆஃப் கம்பெனி திறப்பு விழா
அபுதாபியில் எக்ஸலண்ட் குரூப் ஆஃப் கம்பெனி திறப்பு விழா;
Update: 2024-09-23 15:02 GMT
அபுதாபியில் எக்ஸலண்ட் குரூப் ஆஃப் கம்பெனி திறப்பு விழா
அபுதாபி முசபாவில் எக்ஸலண்ட் குரூப் ஆஃப் கம்பெனி நிறுவனத்தின் சார்பில் திறக்கப்பட்ட புதிய நிறுவனம் திறப்பு விழாவிற்கு நிறுவனர் சீர்காழி புத்தூர் ஷமீர் முஹம்மது மற்றும் ஜாஹிர் ஹுசைன் அழைப்புதலின் பேரில் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை அல்ஹாஜ் H. M. முகம்மது ஜமாலுதீன் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். புதிய நிறுவனத்தை அல்ஹாஜ் நோபல் குழுமத்தின் நிறுவனர் எம் சாகுல் ஹமீது ஹாஜியார் திறந்து வைத்தார். அய்மான் சங்கத்தின் மார்க்கத் துறை செயலாளர் அல்ஹாஜ் S. M. B. ஹுசைன் மக்கி மஹ்ழரி அனைவருக்கும் தொழுகை நடத்தி நிறுவனத்திற்காக பிரார்த்தனை செய்தார். இறுதியாக இரவு உணவோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது