கத்தாரில் மரக்கன்றுகள் நடும் பணியில் இந்திய மாணவர்கள்
கத்தாரில் மரக்கன்றுகள் நடும் பணியில் இந்திய மாணவர்கள்
Update: 2024-09-21 10:04 GMT
தோஹா : கத்தார் நாட்டில் உள்ள இந்திய பள்ளிக்கூடங்களில் படித்து வரும் மாணவ, மாணவியர் சுற்றுச்சூழலை மேம்படுத்த உதவும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் வீட்டுத் தோட்டங்களை அமைக்கும் வகையில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. அப்போது வீட்டுத் தோட்டம் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை அவர்கள் வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரிகள், பள்ளிக்கூட முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.