மாலத்தீவில் மீண்டும் ஒரு செவிலியருக்கு அநீதி
மாலத்தீவில் மீண்டும் ஒரு செவிலியருக்கு அநீதி;
மாலத்தீவில் மீண்டும் ஒரு செவிலியருக்கு அநீதி
மாலத்தீவில் உள்ள தீவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரியை கற்பழிக்க முயற்சி நடந்துள்ளது.நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தபோது அதே தீவில் உள்ள ஒரு முக்கிய பிரமுகர் வீட்டில் நுழைந்த அந்த சகோதரியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அந்த சகோதரி சத்தம் போடவே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இது சம்பந்தமாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை அந்த நபர் கைது செய்யப்படவில்லை. இது சம்பந்தமாக இந்திய தூதரகத்திற்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 மாதத்தில் இது மூன்றாவது சம்பவம். இந்திய தூதரகம் சார்பாக இந்திய அரசு சார்பாக மாலத்தீவு அரசுக்கு தனது கண்டனத்தை கண்டிப்பா தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் இது போன்ற சம்பவங்கள் தொடர வாய்ப்பு இருக்கிறது. தனது குடும்பத்தை பிரிந்து சூழ்நிலை காரணமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு வரும் பெண்கள் இப்படிப்பட்ட சம்பவங்களால் பாதிக்கப்பட்டு வருவது வழக்கமாகி வருகிறது. பல தீவுகளில் ஆசிரியையாக செவிலியர்களாக பணிபுரியும் பெண்கள் பயத்துடனே வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நமக்கு ஏதாவது ஒன்று என்றால் இந்திய தூதரகம் உதவும் என்று தான். நமது இந்திய தூதரகம் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவெளிநாடு வாழ் தமிழா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.