துபாயில் தொழில் நிறுவனங்களுக்கான சர்வதேச விருது வழங்கும் விழா
துபாயில் தொழில் நிறுவனங்களுக்கான சர்வதேச விருது வழங்கும் விழா
Update: 2024-09-30 14:23 GMT
துபாயில் டிராவல், ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு சர்வதேச விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு தலைமை விருந்தினர்களாக ஷேக் ஜுமா பின் மக்தூம் அல் மக்தூம் அலுவலக செயல் இயக்குநர் யகூப் அல் அலி, ஷேக் அலி பின் அப்துல்லா அல் முல்லா, துபாய் போலீஸ் அதிகாரி ஒமர் அல் மர்சூகி, அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கார்த்திகை செல்வம் சிறப்புடன் செய்திருந்தார்.