ஷார்ஜாவில் நடந்த சர்வதேச கல்வி கருத்தரங்கு

ஷார்ஜாவில் நடந்த சர்வதேச கல்வி கருத்தரங்கு

Update: 2024-09-28 15:12 GMT

ஷார்ஜாவில் நடந்த சர்வதேச கல்வி கருத்தரங்கு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஷார்ஜா வெஸ்ட்போர்ட் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் சென்னை, சவீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து 2வது சர்வதேச கருத்தரங்கை ஷார்ஜாவில் நடத்தியது. சென்னை, சவீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் குனிதா அருண் சந்தோக் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ஷார்ஜாவில் இந்த கருத்தரங்கு மிகவும் சிறப்புக்குரியது என்றார்.

ஷார்ஜா வெஸ்ட்போர்ட் பல்கலைக்கழக கல்லூரியின் அசோஷியேட் டீன் டாக்டர் சூஃபி அன்வர் மற்றும் கிருஷ்ணகிரி கே.எம். கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் கே. அன்பு ஆகியோர் முக்கிய உரை நிகழ்த்தினர். இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக அமீரகத்தின் முதலாவது பெண் வனவிலங்கு புகைப்பட நிபுணர் சுவாத் அல் சுவைதி, அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர், துபாய் பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தின் டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் துறை முதல்வர் டாக்டர் ஜாசிம் அல் அவாதி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும் கல்வித்துறையில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. ஷார்ஜா வெஸ்ட்போர்ட் பல்கலைக்கழக கல்லூரியின் கம்ப்யூட்டர் சயன்ஸ் துறையின் பேராசிரியர் டாக்டர் பெனிடா கிறிஸ்டோபர், பேராசிரியர் டாக்டர் ஆர். ஜெயாகார்த்திக் உள்ளிட்ட குழுவினர் இந்த கருத்தரங்கு சிறப்புடன் நடக்க தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.

Tags:    

Similar News