கருநாடகத் தமிழ் இதழியல் சாதனையாளர்கள் விருதுகள் வழங்கும் விழா
கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர் நாள் விழா மற்றும் தமிழ் இதழியல் சாதனையாளர்கள் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது
கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கர்நாடக தமிழ்ப் பத்திரிக்கையாளர் நாள் விழா மற்றும் கருநாடக தமிழ் இதழியல் சாதனையாளர்கள் விருதுகள் வழங்கும் விழா பெங்களுரு இன்ஸ்டியூஷன் ஆஃப் அக்ரிகல்சுரல் டெக்னாலஜிஸ்ட்ஸில் நடைபெற்றது. கவியரங்கில் மா.கார்த்தியாயினி, பொற்கிலி பாவலர் வே.கல்யாண்குமார், கவிநிலவு தேன்மொழி, கவிச்சிற்பி ஆ.வி.மதியழகன், கவித்தென்றல் சுவார்யா, பகுத்தறிவு பாவலர் சே.குணவேந்தன் ஆகியோர் முதன்மை செய்திகள் முதல் அறியல் செய்தி வரை பல செய்திகள் சார்ந்த தலைப்பில் மேடையில் கவிப்படைத்தனர்.
தொடர்ந்து கர்நாடக தமிழ் இதழியல் சாதனையாளர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பொருளாளர் க.தினகர வேலு வரவேற்றார் செயலாளர் ஆ.வீ.மதியழகன் தலைமை தாங்கினார் துணைச் செயலாளர்கள் சொ.தண்டபாணி ஆரியம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் பா.மூர்த்தி தொடக்க கவிதை உரையாற்றினார். கர்நாடக தமிழ் இதழ்கள் இரா.வினோத் நோக்க உரையாற்றினார். தொடர்ந்து கருநாடக தமிழ் இதழியல் சாதனையாளர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொருளாளர் க.தினகரவேலு வரவேற்றார். செயலாளர் ஆ.வீ.மதியழகன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர்கள் சொ.தண்டபாணி, ஆர்.எம்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் பா.மூர்த்தி தொடக்க கவிதை உரையாற்றினார். கர்நாடக தமிழ் இதழ்கள் இரா வினோத் நோக்க உரையாற்றினார். நிகழ்வில் கி.சு இளங்கோவன், முகமது காசிம், கங்காதர், கே.கோபிநாதன், பா.தே.அமுதன், ஆண்டாள் கிள்ளி வளவன், ஆண்டனி, ஆஞ்சி ப.முத்து, ஆர் சிவராஜ், மு.ஸ்ரீதர் ஆகியோருக்கு கர்நாடக தமிழ் இதழியல் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. துணைத் தலைவர் அ.செந்தில்நாதன் நெறியாள்கை மேற்கொண்டார்.
இதில் தினமணி பத்திரிகையாசிரியர் முத்துமணி நன்னன், கருநாடகத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் திருவள்ளுவர் நாள்காட்டி தமிழ் புத்தக திருவிழா ஆண்டுமலர் 2023 வழங்கப்பட்டது.