லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ் சையத் ஹனீஃப்க்கு பஹ்ரைன் சமூக சேவைக்கான உயர் விருது

லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ் சையத் ஹனீஃப்க்கு பஹ்ரைன் சமூக சேவைக்கான உயர் விருது

Update: 2024-09-01 15:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…


பஹ்ரைன் நாட்டில் சிறப்புற சமூக சேவையாற்றி வரும் லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ் நிறுவனர் சையத் ஹனீஃப் பஹ்ரைன் மீடியா சிட்டியின் (பிஎம்சி) உயர் விருது பெற்றார். பஹ்ரைன் மீடியா சிட்டியின் (பிஎம்சி) உயர் விருதினை தன்னலமற்ற சமூக சேவைக்காக, செகயாவில் உள்ள பி.எம்.சி ஆடிட்டோரியத்தில் நடந்த ஓணம் பண்டிகையின் ஒரு மாத காலத் தொடர் நிகழ்ச்சிகளின் துவக்க விழாவில் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பஹ்ரைன் நாடாளுமன்ற நீண்ட கால உறுப்பினர் டாக்டர். ஹசன் ஈத் புஹம்மாஸ், பிரான்சிஸ் கைதாரத் சிஎம்டி - ஐஎம்ஏசி குரூப் ஆஃப் கம்பெனிகள், இந்திய பள்ளி நிர்வாகக் குழுவின் தலைவர் பினு மன்னில், மற்றும் விருது பெற்றவர்கள், ஓணம் பண்டிகை விழாக் குழுவினர் மற்றும் அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News