மஸ்கட் யோகா நிகழ்ச்சி !

Update: 2024-06-12 12:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மஸ்கட் இந்திய தூதரகத்தில் யோகா நிகழ்ச்சி நடந்தது. ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும், உலக அளவிலும் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் வரும் 21 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த நிலையில் ஓமன் நாட்டின் மஸ்கட், சுர், சலாலா, நிஸ்வா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் யோகா தினம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மஸ்கட் இந்திய தூதரகம் சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

Advertisement

இந்த நிகழ்ச்சியானது 'ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் குணப்படுத்தலுக்கான கிளாசிக்கல் யோகா' என்ற கருத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளர்கள் எளிய வகை யோகாசனங்களை செய்து காண்பிக்க பொதுமக்கள் அதனை பின்பற்றி யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் ஒவ்வொரு யோகாவின் ஆசனங்களால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இதேபோல் தொடர்ந்து யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

மேலும் யோகா தொடர்பான பல்வேறு போட்டிகள் சமூக வலைத்தளங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து பங்குபெறவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

Tags:    

Similar News