துபாயில் இசை மற்றும் நடன நிகழ்ச்சி
Update: 2024-03-18 11:32 GMT
இசை மற்றும் நடன நிகழ்ச்சி
துபாய் இந்திய துணை தூதரகத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சர்பபாரதிய சங்கீத் ஓ சன்ஸ்கிர்தி பரிசத் குழுவினரின் இசை, நடன நிகழ்ச்சி மற்றும் ஓவிய கண்காட்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை இந்திய துணை தூதரக அதிகாரி தது மமு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் மேற்கு வங்க கலைஞர்கள் பங்கேற்று தங்களது இசை, நடன திறமையை வெளிப்படுத்தினர். மேலும் இதனையொட்டி நடந்த ஓவிய கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.