அபுதாபியில் ராயல் தோசை கடை உணவகம் ஷாபியா கிளை திறப்பு விழா

அபுதாபியில் ராயல் தோசை கடை உணவகம் ஷாபியா கிளை திறப்பு விழா

Update: 2024-09-23 14:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராயல் சில்க் ஹவுஸ் குழுமத்தின் சார்பாக முசஃப்பாஹ் ஷாபியா 11 ல் புதிய உதயம் ராயல் தோசை கடை உணவகம் ஷாபியா கிளை திறப்பு விழா நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முகம்மது ஜமாலுதீன் அவர்கள் ரிப்பன் வெட்டி ராயல் தோசை கடை உணவகத்தை திறந்து வைத்தார்கள் மற்றும் பொதுச்செயலாளர் லால்பேட்டை A. முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி அவர்கள் உடன் இருந்தனர“. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மௌலானா மௌலவி அபுபக்கர் நவ்மன் அவர்கள் நிகழ்ச்சியில் வியாபாரத்தின் அபிவிருத்திக்காக பிரார்த்தனை செய்தார். நிகழ்ச்சியில் அய்மான் சங்கத்தின் நிர்வாகிகளும் அபுதாபி வாழ் தமிழ் சொந்தங்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். .

Tags:    

Similar News