இலங்கையில் ஜாமியா நளீமியா கலா நிலைய முதல்வருடன் தமிழ்நாடு பிரமுகர் சந்திப்பு

இலங்கையில் ஜாமியா நளீமியா கலா நிலைய முதல்வருடன் தமிழ்நாடு பிரமுகர் சந்திப்பு;

Update: 2024-12-16 03:41 GMT
இலங்கையில் ஜாமியா நளீமியா கலா நிலைய முதல்வருடன் தமிழ்நாடு பிரமுகர் சந்திப்பு

இலங்கையில் ஜாமியா நளீமியா கலா நிலைய முதல்வருடன் தமிழ்நாடு பிரமுகர் சந்திப்பு

    

  • whatsapp icon

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட தொழில் அதிபர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ முகம்மது முகைதீன் ஜாமியா நளீமியாவுக்கு சினேகபூர்வமான விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அந்த கலாநிலையத்தின் முதல்வர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மது சந்தித்து சமுதாயம் சார்ந்த பல விடயங்களை கலந்து பேசினார். ஜாமியா நளீமிய்யா இலங்கை சமூகத்துக்கு காத்திரமான பங்களிப்பை சுமார் 50 வருட காலங்களாக வழங்கிக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான கல்வி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்துக்கு பல ஆண்டுகளாக கடமையாற்றும் முதல்வரை கௌரவப்படுத்துமுகமாக பிரபல தொழிலதிபர் பொன்னாடை போர்த்தி வரவேற்றமை முக்கியமான ஒரு நிகழ்வாகும். மேலும் தான் எழுதிய சிட்டுக்குருவி நூலையும் வழங்கி கவுரவித்தார். இந்த சந்திப்பின் போது சமூக சேவகர் அப்துல் அஜீஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News