துபாயில் தமிழ்நாடு பேராசிரியர் கௌரவிப்பு!
Update: 2024-06-11 04:49 GMT
துபாய் மாநகராட்சியின் சார்பில் உலகசுற்றுச்சூழல் தினத்தையொட்டி ரோசெஸ்டர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று 'பருவநிலை மாறுபாடு மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து சிறப்புரையை கர்டின் பல்கலைக் கழகத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவரும், ஆராய்ச்சித்துறை இயக்குனருமான முனைவர் சித்திரை பொன் செல்வன் நிகழ்த்தினார்.
அவருக்கு மாநகராட்சி அதிகாரி நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் கல்வியாளர் சமியுல்லா கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முனைவர் சித்திரை பொன் செல்வன் அமீரகத்தில் பேராசிரியர் பிரிவில் பத்து ஆண்டுகளுக்கான கோல்டன் விசா பெற்றவர். இந்த விசாவை பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் இவர் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.