தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விழா
தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விழா;
By : King 24x7 Website
Update: 2024-02-22 17:19 GMT
தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விழா
சென்னை திருவாடுதுறை இராசஇரத்தினம் அரங்கில் தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விழா நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்திலிருந்து கடந்த 2023 ஆம் வருடத்திற்கு தமிழ்ச்செம்மல் விருதிற்கு முனைவர் கவிதை கணேசன், சிறந்த மொழி பெயா்ப்பாளா் விருது சிவா பிள்ளை கணபதி பிள்ளை சிவகுருநாதபிள்ளை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பண்ருட்டி முனைவர் கவிதை கணேசனுக்கு தமிழ்ச்செம்மல் விருதினையும், சிவா பிள்ளை கணபதி பிள்ளை சிவகுருநாதபிள்ளைக்கு சிறந்த மொழி பெயா்ப்பாளா் விருதினையும் வழங்கினார்.