இந்திய தூதரகங்களுக்கு கூடுதல் அதிகாரிகள் நியமித்திட வெளிநாடு வாழ் தமிழர் நூர் முகம்மது வேண்டுகோள்
மத்திய அரசின் மூலம் இந்திய தூதரகங்களுக்கு கூடுதல் அதிகாரிகள் நியமித்திட பாராளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை & நலச் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் J.நூர் முகம்மது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளிநாட்டில் பணியாற்றும் இந்திய மக்கள் ஏதேனும் ஒரு சூழலில் தவறு இருக்கிறதோ, இல்லையோ, ஏதோ காரணத்திற்காக அந்தந்த நாட்டில் உள்ள காவல்துறை, சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யும் நடைமுறை இருந்து வருகிறது
கைது செய்து கொண்டு செல்லும் காவல் துறையோ, அவர் யார் ? எந்த நாட்டை சேர்ந்தவர் ? ஏன் கைது ? என்ற விபரத்தை அந்தந்த இந்திய தூதரகங்களுக்கு கொடுப்பது கிடையாது.
அதிலும் குறிப்பாக வியாழக்கிழமை தினத்தில் கைது செய்யப்பட்டால் வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இப்படிபட்ட சூழ்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் வெளியே தெரியாத அவல நிலை தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனால் இந்திய மக்கள் சொல்ல முடியாத துன்பத்திற்கு ஆளாகின்றனர். பொதுவாக எல்லா நாட்டிலும் நமது இந்திய தூதரகம் ஒருவரை இதற்கென நியமித்து, அந்த நாட்டு காவல் நிலையத்திலோ அல்லது பொது சிறையிலோ இருக்கும் நபர்கள் குறித்து தகவல் சேகரித்து அதற்கான நடவடிக்கைகள் எடுப்பது வழக்கம் இருந்து வருகிறது
இச்சூழலில் உடனடியாக ஒருவர் கைது குறித்த தகவல் பற்றி நமது தூதரகத்திற்கு கிடைப்பதில்லை. குறிப்பாக கத்தாரில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கூறப்படும் எட்டு இந்தியர்கள் கத்தார் அரசு கைது செய்யப்பட்ட நிலையில் பல நாட்கள் கழித்து தான் தூதரகத்தின் கவனத்திற்கே வந்துள்ளது இதுவே காரணமாகும் தற்போது அவர்களின் தூக்குதண்டனை இரத்து என மகிழ்வான செய்தி கிடைத்தாலும் இதற்கான தீர்வு ?என்ன
ஆதலால் உடனடியாக மத்திய அரசு எல்லா நாடுகளிலும் ஒவ்வொரு இந்திய தூதரகத்திலும் ஏதேனும் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இந்தியர்கள் குறித்து தினமும் சிறைக்கு சென்று கண்டறிய அதிகபட்சம் மூன்று அதிகாரிகளை நியமித்திட வேண்டும் அல்லது இந்திய தூதரகத்திற்கு அந்தந்த நாடுகளில் காவல்துறை யாரையேனும் கைது செய்திருந்தால் அது குறித்த தகவல் அறிக்கை இரண்டு நாள்களுக்கு ஒரு முறை தர வேண்டும் என கோரிக்கை வைத்து செயல்படுத்திட வேண்டும் அப்போது தான் நம்மவர்கள் நிலை என்னவென்று அறிந்திட முடியும் இது குறித்து கனிமொழி கருணாநிதி எம்.பி பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்திட வேண்டும் என வெளி நாடு வாழ் இந்தியர்கள் சார்பில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை & நலச் சங்கம் மாநில துணை பொதுச் செயலாளர் j.நூர் முகம்மது கேட்டுக் கொண்டார்.