கஞ்சா கடத்த முயற்சி மூன்று பேருக்கு 14 ஆண்டுகள் சிறை
கஞ்சா கடத்த முயற்சி மூன்று பேருக்கு 14 ஆண்டுகள் சிறை
By : King 24x7 Website
Update: 2024-01-09 09:50 GMT
புதுக்கோட்டை திருச்சியில் தனியார் கொரியர் நிறுவனத்திற்கு பார்சலில் கஞ்சா கடத்தி வரப்பட உள்ளதாக மதுரை போதைப்பொருள் தடுப்பு சுங்க இலாகா பிரிவு போலீசாருக்கு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் திருச்சி வந்து அந்த பார்சலை வாங்கும் நபர்களை கண்காணித்தனர். அப்போது அந்த பார்சல் வாங்க வந்த உசிலம்பட்டி சேர்ந்த மாயப்பாண்டி வயது 33, திருச்சியை சேர்ந்த சசிகுமார் வயது 25 ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி வயது 38 என்பவரும் கைது செய்யப்பட்டார். 201 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு புதுக்கோட்டை போதை பொருள் தடுப்பு சட்டம் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாபுலால் நேற்று மாயாண்டி, சசிகுமார், பாண்டி ஆகிய மூன்று பேருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க அவர் உத்தரவிட்டார்.