சிறுமியை பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை,
4 வயது சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மகிளா கோர்ட் தீர்ப்பு.
By : King 24x7 Website
Update: 2023-12-30 10:59 GMT
பெரம்பலூர் துறைமங்கலம் பங்களா ஸ்டாப் அருகே வசித்து வந்த கலியபெருமாள் மகன் ஆனந்தராஜ் வயது 29 கூலி தொழிலாளி கடந்த 5.8.2021 ஆம் தேதி 4 வயதான சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார் அது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர் குண்டர் சட்டத்தின் மீதும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் இருந்து வந்தார். அந்த வழக்கினை டிசம்பர் - 29ம் தேதி இன்று விசாரித்த பெரம்பலூர் மகிளா நீதிமன்ற நீதிபதி தனசேகரன் ஆனந்தராஜ் மீதான குற்றத்தை அரசு தரப்பில் சந்தேகத்திற்குஇடமின்றி நிரூபித்ததால் ஆனந்தராஜுக்கு போக்சோ சட்டம் பிரிவு 5 (M) உடன் இணைந்த பிரிவு 6 ன்படியான குற்றத்திற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூபாய் 50,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் கூடுதலாக கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் சுந்தரராஜன் ஆஜராகி வாதாடினார்.