தூத்துக்குடியில் கூலிப்படையினர் 6பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது

தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகருமான பால பொய் சொல்லான் என்பவர் கூலிப்படையை இறக்கியதை அறிந்த தனிப்படை காவல்துறையினர் 6 பேரை கைது செய்தனர்.

Update: 2024-04-30 09:49 GMT

தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பால பொய் சொல்லான் தொழிலதிபரான இவர் பாரதிய ஜனதா கட்சியில் பதவி வகித்து வருகிறார். பால பொய் சொல்லானுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள நிலையில்,

அதே பகுதியைச் சேர்ந்த கிரேஸ் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பால பொய் சொல்லணும் கிரேசும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் பால பொய் சொல்லான் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வடபாகம் காவல் நிலையத்தில் கிரேசி புகார் அளித்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கிரேசிக்கும் அவரது வீடு அருகே வசித்து வரும் அந்தோணிசாமி என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்தோணி சாமியுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக கிரேசி தனக்கு எதிராக செயல்படுவதாக எண்ணிய பால பொய் சொல்லான் அந்தோணிச்சாமியை கூலிப்படை மூலம் தாக்குதல் நடத்த எண்ணியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தனிப்படை போலீசார் தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் உள்ள பால பொய் சொல்லானுக்கு சொந்தமான ஒரு இடத்தை சோதனை செய்தனர் அப்போது அங்கே பதுங்கி இருந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படை நபர்கள் 6 பேரை கைது செய்தனர்‌.

மேலும் அவர்களிடமிருந்து வாள், கத்தி, போன்ற பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்தனர். இதில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராஜா, முத்தழகு, விஜய், வல்லரசு ,சந்தன பாண்டி ,சக்திவேல் ஆகிய ஆறு பேர் என்பது தெரியவந்தது பால பொய் சொல்லான் அந்தோணி சாமி மீது கொலை செய்வதற்காக தங்களை விருதுநகரில் இருந்து அழைத்து வந்து தங்க வைத்து இருப்பதாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து வடபாகம் காவல்துறையினர் கூலிப்படையைச் சேர்ந்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் பாஜக பிரமுகரும் தொழிலதிபருமான பால பொய் சொல்லான் தனது இரண்டாவது மனைவியுடன் பழகிய நபர் மீது தாக்குதல் நடத்த கூலிப்படையை அழைத்து வந்து தங்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News