கடன் தொல்லையால் கைத்தறி தொழிலாளி மாயமானார்
குமாரபாளையத்தில் கடன் தொல்லையால் கைத்தறி தொழிலாளி மாயமானார்.
By : King 24x7 Website
Update: 2024-02-06 06:26 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காமராஜபுறம் பகுதியை சேர்ந்தவர் திருமால், (42). கைத்தறி கூலித்தொழிலாளி. இவர் பல மாதங்களாக கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இவரது மனைவி ருக்மணி, (38), இவரிடம், தைரியமாக இருங்கள், மெல்ல மெல்ல கடன் செலுத்தி விடலாம், என கூறி வந்துள்ளார். நவ. 27 ல் வங்கிக்கு கடன் தொகை செலுத்த, காலை 10:00 மணியளவில் சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ருக்மணி, குமாரபாளையம் போலீசில் புகார் செய்து, காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு கொடுத்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன திருமாலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.