கல்லூரி மாணவர் தற்கொலை
தனியார் கல்லூரி மாணவர் தூக்கு மாட்டி உயிரிழப்பு
By : King 24x7 Website
Update: 2023-12-29 18:21 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கல்லூரி மாணவர் தூக்கு மாட்டி இறந்தார். பெரம்பலூர் மாவட்டம், வயலப்பாடியை சேர்த்தவர் ராஜேஷ், 19. குமாரபாளையம் தனியார் பார்மசி கல்லூரியில் பி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். டிச. 23ல் விடுமுறைக்கு வீட்டுக்கு சென்று விட்டு, டிச.28ல் திரும்ப வந்துள்ளார். இவர் வெளியில் அறை எடுத்து தங்கி படித்து வருவதாக தெரிகிறது. நேற்றுமுன்தினம் இரவு 09:00 மணியளவில் நண்பர்களுடன் கேரம் போர்டு ஆடியுள்ளார். அதன்பின் தன் அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கு மாட்டி இறந்தார். இது குறித்து இவரது நண்பர்கள், ராஜேஷ் குடும்பத்தாருக்கு தகவல் சொல்ல, அவர்கள் நேரில் வந்து, ராஜேஷ் உடலை பார்த்த பின், குமாரபாளையம் போலீசில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு கொடுத்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.