நாமக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது | கிங் நியூஸ் 24x7 |news 24x7
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (6.1.2025) மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் .
இராசிபுரம் (SC) சட்டமன்ற தொகுதியில் - 261 ,
சேந்தமங்கலம் (ST) சட்டமன்ற தொகுதியில் – 284,
நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் – 290,
பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் - 254,
திருச்செங்கோடு – 261
குமாரபாளையம் – 279 என மொத்தம் 1,629 வாக்குச்சாவடிகள் உள்ளன.
இன்று 06.01.2025 வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி,
இராசிபுரம் - (SC) சட்டமன்ற தொகுதியில் 1,14,027 - ஆண், 1,20412 பெண் வாக்காளர்கள், மற்றவர்கள் – 11 என மொத்தம் 2,34,450 வாக்காளர்களும்,
சேந்தமங்கலம் - (ST) சட்டமன்ற தொகுதியில் 1,20,244 ஆண், 1,26,827 பெண் வாக்காளர்கள், 33 மற்றவர்கள் என மொத்தம் 2,47,104 வாக்காளர்களும்,
நாமக்கல் - சட்டமன்ற தொகுதியில் 1,25,608 ஆண், 1,35,876 பெண் வாக்காளர்கள், 90 மற்றவர்கள் என மொத்தம் 2,61,540 வாக்காளர்களும்,
.பரமத்திவேலூர் - சட்டமன்ற தொகுதியில் 1,05,471 ஆண், 1,15,438 பெண் வாக்காளர்கள், 11 மற்றவர்கள் என
மொத்தம் 2,20,920 வாக்காளர்களும்,
திருச்செங்கோடு - சட்டமன்ற தொகுதியில் 1,11,497 ஆண், 1,19,144 பெண் வாக்காளர்கள், 63 மற்றவர்கள் என மொத்தம் 2,30,704 வாக்காளர்களும்,
குமாரபாளையம் - சட்டமன்ற தொகுதியில் 1,25,708 ஆண், 1,33,768 பெண் வாக்காளர்கள், 78 மற்றவர்கள் என மொத்தம் 2,59,554 வாக்காளர்களும் உள்ளனர்.
மாவட்டத்தில் மொத்த ஆண் வாக்காளர்கள் 7,02,555,
பெண் வாக்காளர்கள் 7,51,465
மற்றவர்கள் 252 என நிகர வாக்காளர்கள் 14,54,272
வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் தொடர்ச்சியாக இன்று முதல் 2025-க்கான தொடர் திருத்தப்பணிகள் நடைபெற உள்ளது.
இத்தொடர் திருத்தப்பணியின்போது, 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள(அதாவது 31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம். மேலும், 17 வயது பூர்த்தியடைந்தவர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம். இவர்களின் பெயரானது 18 வயது பூர்த்தியடையும் காலாண்டில் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். மேலும், இதுவரை வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்த்துக்கொள்ளாதவர்களும், திருத்தங்கள் செய்ய விரும்புபவர்களும் உரிய விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் / நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் அளிக்கலாம்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், நாமக்கல்வருவாய் கோட்டாட்சியர் திரு.ஆர்.பார்தீபன், தேர்தல் வட்டாட்சியர் திரு.செல்வராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.