வரலாற்றில் இன்று ஜனவரி 3 ....

Update: 2025-01-03 06:19 GMT

அன்னை சாவுத்ரி பாய் பூலே

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் அன்னை சாவுத்ரி பாய் பூலே அவர்களின் பிறந்த தினம் இன்று அவருக்கு தனது அகவை தின வாழ்த்துக்கள் அவரது புகழை போற்றுவோம்

மகாத்மா ஜோதிராவ்பூலேவை தனது 9 ஆம் வயதில் 1840 இல் மணந்தார்

சாதிய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார் பழமை வாதத்துக்கும் மூடநம்பிக்கைக்கும் எதிராக போராடியவர்

இவர்களுக்கு குழந்தைகள் இல்லை ஒரு பிராமண விதவையின் யஸ்வந்த்ராவ் என்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர் 1848 ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார் மீண்டும் 1848-இல் புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியை துவங்கி அதில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார் கல்வி ஒன்றே ஒரு சமூக நிலையை மாற்றும் என்று உறுதியாக இருந்தவர்

விதவைப் பெண்களின் தலையை மொட்டையடிப்பதை கண்டித்து நாவிதர்களைத் திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்

1870 ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதைகளான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார்

Tags:    

Similar News