விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் ச.உமா பங்கேற்பு

Update: 2023-09-30 05:00 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் மாதம் தோறும் 2-வது வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீரக்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். இக்கூட்டங்களில் அந்தந்த பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு தெரவிக்கப்பட்டது.

நாமக்கல் தாலூகா -எர்ணாபுரத்திலும். திருச்செங்கோடு தாலூகா - மோளிப்பள்ளி கிராமத்திலும், மோகனூர் தாலூகா - அரசநத்தம் கிராமத்திலும், இராசிபுரம் தாலூகா - மின்னக்கல் பகுதியிலும், கொல்லிமலை தாலூகா - தேவனூர் கிராமத்திலும், பரமத்தி தாலூகா மேல்சாத்தம்பூர், சேந்தமங்கலம் தாலூகா - காவக்காரன்பட்டி கிராமத்திலும் மற்றும் குமாரபாளையம் தாலூகா ஆனங்கூரிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.10.2023 ஆம் தேதியன்று நடத்தப்படும்.

Advertisement

இக்கூட்டத்தில் வட்டார அளவில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொள்வார்கள். இக்கூட்டத்தினை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நடமாடும் வாகனம் மூலம் மண்பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 05.10.2023 ஆம் தேதி வியாழக் கிழமை எருமப்பட்டி வட்டாரம் - வரகூராம்பட்டி கிராமத்திலும், 11.10.2023 ஆம் தேதி மோகனூர் நன்செய் இடையாரிலும், 17.10.2023 ஆம் தேதி பரமத்தி-வேலூர் வட்டம் - கூடச்சேரியிலும், 09.10.2023 ஆம் தேதி கபிலர்மலை வட்டாரம் - கோப்பனம்பாளையத்திலும், 29.10.2023 ஆம் தேதி எலச்சிபாளையம் வட்டாரம் நல்லாம்பாளையத்திலும் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை அந்தந்த பகுதி விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களின் மண் மாதிரிகளை எடுத்து இலவசமாக ஆய்வு செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், திருச்செங்கோடு வட்டாரம் - நாராயணம்பாளையம், நாமக்கல் வட்டாரம் - வசந்தபுரத்திலும் அலுவலக வேலை நாட்களில் எப்போது வேண்டுமென்றாலும் மண் பரிசோதனை செய்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

2023-24 ஆம் ஆண்டு இரபி பருவத்திற்கான புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் (குத்தகைதாரர் உட்பட) பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், அரசு பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் பயிர் காப்பீடு திட்டத்தில் சேரலாம். பயிர் கடன் / வேளாண் நகைக் கடன் பெறாத விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு திட்டத்தில் தகுதியான விவசாயிகள் இணைந்து பயன் பெறலாம். பயிர் காப்பீடு செய்வதற்கு 1) முன்மொழிவுப் படிவம், 2 விண்ணப்பபப் படிவம் 3) பயிர் சாகுபடி அடங்கல் அறிக்கை, 4) ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

இன்றைய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கா.இராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சிவக்குமார், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மா.க.சரவணன், திருசெங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சே.சுகந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் த.செல்வகுமரன், வேளாண்மை இணை இயக்குநர் சு.துரைசாமி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ப.முருகேசன், தோட்டக்கலைத் துணை இயக்குநர் கி.கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கா.முருகன், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம்) நாசர் மற்றும் இதர துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News