குமரியில் அரசு பஸ் வசதிகளை அதிகரிக்க எம்.பி கோரிக்கை.
By : King 24X7 News (B)
Update: 2023-11-23 10:06 GMT
குமரி மாவட்டம் நாகர்கோவில் ராணி தோட்டத்தில் உள்ள திருநெல்வேலி கோட்ட பொதுமேலாளர் மெர்லின் ஜெயந்தியை சந்தித்து விஜய்வசந்த் எம்.பி. பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மற்றும் முக்கிய நகரங்களை கிராமங்களுடன் இணைக்கும் வகையில் பேருந்து வசதிகள் போதிய அளவு இல்லாத நிலை உள்ளது. ஏராளமான வழித்தடங்களில் இயங்கி வந்த பேருந்துக்குள் தக்க காரணமின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். குறிப்பாக மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் ஊர்களுக்கு பேருந்து வசதிகள் தடையின்றி கிடைக்க ஆவன செய்ய கேட்டுகொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான நோயாளிகள் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரி, ஆர்.சி.சி., ஸ்ரீ சித்திரை மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளுக்கு சிகிச்சை தேடி செல்கின்றனர். அவர்கள் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து பேருந்து மாற வேண்டிய கட்டாயம் தற்பொழுது உள்ளது. நோயாளிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு நேரடி பேருந்து வசதி செய்து தர வேண்டும். எனவும் கேட்டுக்கொண்டார்.