குடியரசு தின விழா சிறப்பு அறிவிப்பு

குடியரசு தின விழா சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-11-24 09:22 GMT

கல்வி அலுவலகம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குடியரசு தின விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்த விரும்பும் பள்ளி, கல்லூரிகள் டிச.7க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்துசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் 26.01.2024 அன்று குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. விழாவின் போது பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகளில் பராம்பரிய கலைகள், கலாச்சரம் மற்றும் பண்பாடு, அறிவியல் வளர்ச்சி,

பல்துறை முன்னேற்றம், தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த விரும்பும் பள்ளி கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 100 நபர்கள் ஒரு குழுவில் பங்கேற்க வேண்டும். நிகழ்ச்சி 7 நிமிடங்கள் வரை இருக்கலாம். நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் பள்ளி மற்றும் கல்லூரிகள் தேர்வு செய்யப்படும் இசைத்தொகுப்பு/பாடல், கருப்பொருள் Concept உள்ளிட்ட விவரங்களுடன் தங்கள் விண்ணப்பங்களை டிசம்பர் 7, 2023-க்குள் collrtnv@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News