சிவகங்கையில் பழங்கால பொருட்களின் கண்காட்சி
பாரம்பரிய வாரவிழா கொண்டாட்டம்;
By : King 24X7 News (B)
Update: 2023-11-24 17:00 GMT
மாணவர்கள்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொல்நடைக்குழு மற்றும் மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் ஆகியவை இணைந்து உலக பாரம்பரிய வார விழா கொண்டாட்டமாக பழமையான பாரம்பரிய பொருள்களை பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்காக காட்சி படுத்தினர்.
இதில் அரியவகை பொருட்களான வளரி, பழங்கால விளக்குகள், பெட்ரமாஸ் விளக்குகள், பழங்கால டெலிபோன்கள், பித்தளை பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்