துறைவைக்கோவிற்கு உற்சாக வரவேற்பு
சங்ககிரியில் மதிமுக கொடியேற்று விழா;
By : King 24X7 News (B)
Update: 2023-11-25 08:55 GMT
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகேயுள்ள குப்பனூர் பைபாஸ் பகுதியில் மதிமுக கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் கொடியேற்றுவிழா சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரவர்மன் தலைமையில் நடைபெற்றது. இதில் மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ கட்சி கொடியையேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் விஜயா, ஒன்றிய அவைத்தலைவர் மதிவாணன், நிர்வாகிகள் தங்கராசு, அண்ணாதுரை, கார்த்தி, ராஜீ, சங்ககிரி நகர செயலர் கதிர்வேல் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். விழாவிற்கு முன் கோவையிலிருந்து சங்ககிரி வந்த மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோவிற்கு சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.