மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு

சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-25 09:44 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்டலத்துக்குட்பட்ட அனுப்பர்பாளையம் முதல் கணியாம் பூண்டி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையின் பல இடங்களில் சாலை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து, மக்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் அந்த இடங்களில் குண்டும், குழியுமான பள்ளத்தில் விழுந்து அன்றாடம் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்தச் சாலையில் தினசரி பள்ளி ,கல்லூரிப் பேருந்துகள், பனியன் கம்பெனிகளின் சரக்கு வாகனங்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என பலநூற்றுக் கணக்கில் சென்றுவருகின்றன.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, இதே சாலையை அமைக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போதைக்கு சில வேலைகளைச் செய்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சாலையை முழுமையாக அமைக்கவில்லை. இந்தச் சாலையின் முக்கியப் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, நெடுஞ்சாலைத் துறை, உடனடி கவனம் செலுத்தி, தரமான முறையில் - மழைநீரும், கழிவுநீரும் தேங்கி நிற்காத வகையில் - அமைத்துத் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 15.வேலம்பாளையம் நகரக் குழு சார்பில் பகுதி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News