செல்வகணபதி விடுதலை எடப்பாடி நகர திமுக சார்பில் உற்சாக கொண்டாட்டம்.

Update: 2023-11-28 13:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி. எம்.செல்வகணபதி மீதான தண்டனையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து எடப்பாடியில் நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சுடுகாட்டு கொட்டகை அமைத்ததில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் டி.எம் செல்வகணபதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருந்தது.

Advertisement

இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து டி. எம்.செல்வகணபதி கடந்த 2014 - ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்த நிலையில் தற்போது இன்று டி.எம். செல்வகணபதி, மீதான தண்டனையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இதைத் தொடர்ந்து எடப்பாடி நகர மன்ற தலைவர் பாஷா, தலைமையில் பிரம்மாண்டமாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News