முன்னாள் மாணவர்கள் சார்பில் புதிய உண்ணும் அறை திறப்பு விழா!

Update: 2023-11-28 16:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் (crazy guys) என்னும் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில் ரூ.2.50 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய உண்ணும் அறை திறப்பு விழா நடைபெற்றது.சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வளாகத்தில் ( crazy guys ) என்னும் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில் ரூ.இரண்டரை இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட உணவு உண்ணும் அறை திறப்பு விழாவிற்கு அப்பள்ளி தலைமையாசிரியர் மஞ்சுளா தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்றத்தலைவர் பழனிவேல் முன்னிலையில் முன்னிலை வகித்தார்.வட்டார வள மேற்பார்வையாளர் சிவகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.பின்னர் தொடங்கிய புதியதாக கட்டப்பட்ட உணவு உண்ணும் அறையை வட்டார கல்வி அலுவலர்கள் இராமதிலகம், இலாஹிஜான் ஆகியோர் கூட்டாக திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.மேலும் இதில் பேசிய அப்பள்ளி தலைமையாசிரியர் மஞ்சுளா மாணவ, மாணவிகளில் நலனில் அக்கறை கொண்டு உணவு உண்ணும் புதிய அறையை கட்டிக் கொடுத்த ( crazy guys ) என்னும் முன்னாள் மாணவர் அமைப்பினருக்கு பள்ளியின் சார்பிலும், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக் குழு சார்பிலும் பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் புதுகை நடிகர் திலகம் சிவாஜி நகர் மன்ற தலைவர் சுப்பையா சார்பில் பிரியாணி மதிய உணவாக வழங்கப்பட்டது.இதில் அழகு அறக்கட்டளை,பள்ளி மேலாண்மை குழுவினர், முன்னாள் மாணவர்கள்,ஊர் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் ஆசிரியர் வள்ளிக்கண்ணு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Similar News